உபயோக விதிமுறைகள்
வலைத்தள விவரங்கள்
இந்த வலைத்தளத்தின் விவரங்கள் எங்களின் உபயோக விதிமுறைகளை ஒத்துக்கொண்டு தாங்கள் இந்த வலைத்தளத்தின் எந்த ஒரு விவரங்களையும் தங்களின் சொந்த உபயோகத்திற்காக திரும்ப பதித்தல் அல்லது கொடுத்தல் ஆகியன செய்ய மாட்டோம் என்று உறுதிகூறுவோருக்கு மட்டுமே கொடுக்கப்படுவன ஆகும். இந்த வலைத்தளம் இந்திய இந்தியத் துணைக் கண்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தின் விவரங்கள் இந்தியச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளத்தை எந்த ஒரு மறுபதிப்பும் எந்த ஒரு வகையிலும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. உரிமையில்லாத உபயோகங்களும் மறுபதிப்புகளும் கடுமையான சமூகம் மற்றும் குற்றங்கள் தண்டனைக்குக்கீழ் கொண்டுவரப்பட்டு சட்டத்தின் கீழ் இதற்கு உள்ள மிகப்பெரிய தண்டணையைக் கொடுக்கப்படும்.
உறுப்பினர் சேவை
தமிழ்கல்யாணம்.காம் இன் உறுப்பினர் சேவையானது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு கீழ்க்கண்ட உபயோக விதிமுறைகளின் படி தரப்படுகிறது. எந்த ஒரு உறுப்பினரும் மற்ற உறுப்பினரின் தொடர்பு விவரங்களைக் கொண்டு தொந்திரவு செய்யக் கூடாது. எந்த விதமான தொடர்பும் நாகரீகமாகவும் கல்யாணத்தைக் கருத்தில் கொண்டும் மட்டுமே இருக்க வேண்டும். உறுப்பினர் தான் இங்கே கண்ட எந்த ஒரு தொடர்பு விவரங்களையும் மூன்றாவது நபர்களிடமோ அல்லது அவர்களின் குடும்பத்தினரல்லாதவரிடமோ கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்காக அல்லது உங்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்காக வரனைத் தேடுவதற்கு மட்டுமே இங்கே வந்துள்ளீர்கள் என்பதை கருத்தில் கொள்ளவும். இந்த உறுப்பினர் சேவை எந்த ஒரு வியாபார நோக்கத்திற்கும் அல்லது கல்யாணத் தரகர் வேலைக்கும் அல்லது கல்யாணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வியாபாரத்திற்கும் பயன்படுத்துதல் கூடாது. நீஙக்ள இந்த வலைத்தளத்தின் இணைய அரட்டை மற்றும் அஞ்சல் வசதியை எந்த ஒரு உறுப்பினரையும் தொந்திரவு செய்யவோ அல்லது வக்கிரம் மற்றும் பாலியல் விவரங்களை தெரிவிக்க அல்லது பகிர்ந்து கொள்ளவோ உபயோகப்படுத்தக்கூடாது. உங்களின் இரு தரப்பினருக்கும் இந்த வலைத்தளத்தின் சேவைகள் எவ்வளவு பயனுள்ளவை என்று உணர்ந்து இந்த சேவைகளை நாகரீகமாகப் பயன்படுத்த வேண்டும். எந்த விதமான தவறான தொடர்பும் இந்த வலைத்தளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள உறுப்பினர் உபயோக விதிமுறைகளில் எதை மீறினாலும் அது கடுமையான சமூக மற்றும் தனியுரிமைக் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் மேலேயுள்ள எதையாவது மீறுவதாக நாங்கள் அறிந்தால், உடனடியாக நாங்கள் உங்களின் மேல் வழக்குத் தொடுத்து அதை சட்டத்தின் கீழ் எவ்வளவு அதிகமான தண்டனை இருக்கின்றதோ அவ்வளவு அதிகமான தண்டனைக்கு முறையிடுவோம்.
தகவல்கள்
இந்த வலைத்தளத்தில் காட்டப்பட்டுள்ள தகவல்கள் பொது உபயோகத்திற்கு மட்டுமேயாகும். இந்த தகவல்களில் காட்டப்பட்டுள்ளவர்களுக்கு அவர்கள் தரும் சேவையல்லாத விவரங்களுக்காக தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை உங்களின் சொந்த உபயோகத்திற்காக உங்களின் வலைத்தளத்திலோ அல்லது வேறெந்த விதமாகவோ மறுபதிப்பு செய்தால் அது தண்டணைக்குரிய குற்றமாகும். இந்த தகவல்களில் எதை நீங்கள் தவறாக பயன்படுத்தியதாக நாங்கள் அறிந்தாலும் அதன் விளைவு உங்களால் தாங்க இயலாத வண்ணம் இருக்கும்.
வாழ்த்துக்கள்
இந்த வலைத்தளத்தின் வாழ்த்துக்கள் பகுதி எங்கள் வலைத்தளம் எவ்வளவு உபயோகமானது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் அதே சமயம் உங்களின் வடிவமைப்புத் தேவைகளுக்காகவும் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. தவறான விதத்தில் வாழ்ததுக்களில் காண்பிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை நீங்கள் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் பகுதி உண்மையான நட்புறவை வளர்க்கவே கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் அதை நாகரீகமான நட்புறவுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். வாழ்த்துக்கள் பகுதியிலுள்ள எந்த ஒரு விவரங்களையும் நீங்கள் தவறாக உபயோகப் படுத்தினால் விளைவு உங்களால் தாங்க இயலாத வண்ணம் இருக்கும்.
பதிவிறக்கங்கள்
பதிவறக்கங்கள் பகுதி பயனாளர் உபயோகத்திற்காக மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருள்களையும் கோப்புக்களையும் நீங்கள் உங்களுக்காக அல்லது உங்கள் குடும்பத்தினருக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த மென்பொருள்களும் கோப்புக்களும் தனிமனிதர் மற்றும் நிறுவனங்களின் பதிப்புரிமை மற்றும் விற்பனையுரிமை கொண்டவையாகும். நாங்கள் இந்த மென்பொருள்களையும் கோப்புகளையும் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் சொந்த உபயோகத்திற்கு மட்டும் உபயோகப்படுத்துவதற்கான உரிமைகளை மட்டுமே பெற்றுள்ளோம். இந்த மென்பொருள்களையும் கோப்புக்களையும் தவறான முறையில் உபயோகப்படுத்துவதும் வினியோகிப்பதும் சம்பந்தப்பட்ட தனிமனிதர் மற்றும் நிறுவனங்களின் பதிப்புரிமைகளை நீங்கள் மீறுவதாக எடுத்துக்கொள்ள வழிவகுத்து உங்களை சட்டத்தின் கீழ் உள்ள மிகப்பெரிய தண்டனைக்கு உட்படுத்த நேரிடும்.
